மக்காச்சோளம் விளைச்சல் அமோகம்

மக்காச்சோளம் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2023-10-22 19:37 GMT

ஆலங்குளம், கரிசல்குளம், தொம்பகுளம், ரெட்டியபட்டி, கொங்கன்குளம், கண்மாய்பட்டி, வலையபட்டி, மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கன்பட்டி, கீழாண்மறைநாடு, ஏ.லட்சுமிபுரம், கோபாலபுரம், புளியடிபட்டி, பாரைப்பட்டி, ஜமீன் கல்லமநாயக்கர்பட்டி, குண்டாயிருப்பு, முத்துசாமிபுரம், எட்டக்காபட்டி, எதிர்கோட்டை, இ.டி. ரெட்டியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மக்காச்சோளம் நன்கு விளைந்து உள்ளது. கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்டு 50 நாட்கள் ஆன நிலையில் நல்ல பசுமையாக வளர்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்த பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. தற்போது 50 நாள் பயிராக இருப்பதால் உரமிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து மகசூல் கூடுதலாக பெறலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்