மக்காச்சோளம் அறுவடை பணிகள் தீவிரம்

மக்காச்சோளம் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-02-07 19:13 GMT

ஆலங்குளம்,

ஆலங்குளம், தொம்பகுளம், கீழராஜகுலராமன், சாமிநாதபுரம், நல்லக்கம்மாள்புரம், கரிசல்குளம், கொங்கன்குளம், மேல பழையாபுரம், கண்மாய் பட்டி, வலையபட்டி, அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கர்பட்டி, கீழாண்மறைநாடு, கோட்டைபட்டி, செல்லம்பட்டி, லட்சுமிபுரம், சுண்டங்குளம், புளியடிபட்டி, கோபாலபுரம், கல்லமநாயக்கர் பட்டி, மாதாங்கோவில்பட்டி, உப்புபட்டி, காக்கிவாடன்பட்டி, எதிர்கோட்டை, முத்துசாமிபுரம், குண்டாயிருப்பு, எட்டக்காபட்டி, இ.டி.ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் 1000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்றோது இங்கு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு ஏக்கருக்கு 25 குவிண்டால் முதல் 30 குவிண்டால் வரை மகசூல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆலங்குளம் இருளப்ப நகர் விவசாயி மாரிமுத்து கூறியதாவது:- தற்போது மகசூல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. ஒரு குவிண்டால் ரூ. 2,250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்