பராமரிப்பு பணிகள்: சோழவந்தான், விக்கிரமங்கலம் பகுதிகளில் மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக சோழவந்தான், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-09-26 00:00 GMT

வாடிப்பட்டி, 

பராமரிப்பு பணிகள் காரணமாக சோழவந்தான், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜயலட்சுமி பேக்டரி, மவுண்டன் லீடரா ஸ்கூல், மேலகால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழ மட்டையான், மேல மட்டையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து, மேலகால் பாலம், தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிபள்ளம், மன்னாடிமங்கலம், ஐயப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன் பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

நாளை மின்தடை

சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின்நிலையம் மற்றும் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விக்கிரமங்கலம், கோவில்பட்டி, பையதான், பாண்டியன் நகர், நரியம்பட்டி, செக்கான் கோவில்பட்டி, கீழப்பெருமாள்பட்டி, அய்யம்பட்டி, சக்கரப்ப நாயக்கனூர், மேல பெருமாள் பட்டி, கிருஷ்ணாபுரம், மணல் பட்டி, அரசமரத்துப்பட்டி, கல்புளிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடு முதலைக்குளம், எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகபட்டி, உடன் காடுபட்டி, கொடிக்குளம், திரவியம்பட்டி, ஜோதி மாணிக்கம், மம்முட்டிபட்டி ஆகியபகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இதேபோல் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் வலையபட்டி பீடரில் மறவர் பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராம கவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி மற்றும் கரடிக்கல் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்