பராமரிப்பு பணி: பெங்களூரு-சென்னை அதிவிரைவு ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக பெங்களூரு-சென்னை அதிவிரைவு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

Update: 2024-07-19 23:47 GMT

சென்னை,

பெங்களூரு யார்டு மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட்-கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையங்கள் இடையே உள்ள பாலங்கள் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில ரெயில்கள் முழுவதுமாகவும், பகுதியாகவும் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் அதிவிரைவு ரெயில் (வண்டி எண்: 12658) வருகிற 30-ந்தேதி, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6 மற்றும் 13-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு அதிவிரைவு ரெயில் (12657) வருகிற 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 7, 14-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* டாக்டர் எம்.ஜி.ஆர்.சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு அதிவிரைவு ரெயில் (12657) வருகிற 30, அடுத்த மாதம் 6 மற்றும் 13-ந்தேதிகளில் ஒயிட்பீல்டு வரை மட்டும் இயக்கப்படும். ஒயிட்பீல்டு-கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* லோக்மானிய திலக் டெர்மினஸ் (மும்பை)-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (11013) வருகிற 29, அடுத்த மாதம் 5 மற்றும் 12-ந்தேதிகளில் பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கன்டோன்மென்ட், கே.எஸ்.ஆர். பெங்களூரு வழியாக இயங்குவதற்கு பதிலாக கவுரிபித்தனூர், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு, ஓசூர் வழியாக இயக்கப்படும்.

* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-மைசூரு காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) வருகிற 30, அடுத்த மாதம் 6, 13-ந்தேதிகளில் பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கன்டோன்மென்ட் வழியாக இயங்குவதற்கு பதிலாக கே.ஆர்.புரம், பையப்பனஹள்ளி, பானசவாடி, ஹெப்பால், யஷ்வந்தபுரம், கே.எஸ்.ஆர். பெங்களூரு வழியாக மாற்று பாதையில் இயங்க உள்ளது.

* மைசூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) வருகிற 30, அடுத்த மாதம் 6 மற்றும் 13-ந்தேதிகளில் பெங்களூரு கன்டோன்மென்ட் வழியாக இயங்குவதற்கு பதிலாக கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், ஹெப்பால், பானசவாடி, பையப்பனஹள்ளி, கே.ஆர்.புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்