ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: சேலம் வழியாக செல்லும் 16 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம் வழியாக செல்லும் 16 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

Update: 2022-11-29 22:20 GMT

சூரமங்கலம்:

பராமரிப்பு பணிகள்

சேலம் ஜங்ஷன் ெரயில் நிலைய யார்டு பகுதியில் தண்டவாளம் இணைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் இன்று முதல் வருகிற 3-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி சேலம் வழியாக இயக்கப்படும் 25 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை 3 நாட்களுக்கு சேலம் வழியாக செல்லும் 25 ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 ெரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என சேலம் ெரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாலக்காடு எக்ஸ்பிரஸ்

அதன்படி, சென்னை -பாலக்காடு எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22651) இன்று மற்றும் நாளை, நாளைமறுநாள் ஆகிய 3 நாட்கள் சேலம், நாமக்கல், கரூர் வழித்தடத்திற்கு பதிலாக சென்னை எழும்பூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். மறுமார்க்கத்தில், பாலக்காடு-சென்னை எக்ஸ்பிரஸ் (22652) வரும் நாளை, நாளை மறுநாள் ஆகிய நாட்களில் திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16339). இன்றும், நாளையும், பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (17235) நாளை, நாளைமறுநாள், தாதர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (11021) இன்று சேலம், நாமக்கல், கரூர் வழித்தடத்திற்கு பதிலாக சேலம், ஈரோடு, கரூர் வழித்தடத்தில் மாற்றி இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் (16340) நாளை மறுநாள், நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் (17236) இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய நாட்களிலும், திருநெல்வேலி-தாதர் எக்ஸ்பிரஸ் (11022) நாளை, நாளைமறுநாள் கரூர், நாமக்கல், சேலம் வழித்தடத்திற்கு பதிலாக கரூர், ஈரோடு, சேலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்,

மதுரை எக்ஸ்பிரஸ்

புதுச்சேரி-மங்களூரு எக்ஸ்பிரஸ் (16855) நாளை, விருத்தாசலம், சின்ன சேலம் ஆத்தூர், சேலம் வழித்தடத்திற்கு பதிலாக விருத்தாசலம், திருச்சி, கரூர், ஈரோடு வழியாக மாற்றுப்பாதையிலும், மறுமார்க்கத்தில் மங்களூரு-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (16856) வரும் நாளை மறுநாள் சேலம், ஆத்தூர் வழித்தடத்திற்கு பதிலாக ஈரோடு, கரூர், திருச்சி, விருத்தாசலம் வழியாக இயக்கப்படும்.

சென்னை -மதுரை எக்ஸ்பிரஸ் (20601) இன்று மற்றும் நாளைமறுநாள் சேலம், ஈரோடு, கரூர் வழியாகவும், மதுரை-சென்னை எக்ஸ்பிரஸ் (20602) நாளை கரூர், ஈரோடு, சேலம் வழியாகவும், ஓஹா-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் (16734) நாளை, திருச்சி- ஸ்ரீ கங்காநகர் எக்ஸ்பிரஸ் (22498) நாளை மறுநாள், சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (12689) நாளைமறுநாள், சேலம், நாமக்கல் வழித்தடத்திற்கு பதிலாக சேலம், ஈரோடு, கரூர் வழியாக இயக்கப்படும், யஸ்வந்த்பூர் -புதுச்சேரி எக்ஸ்பிரஸ் வரும் நாளை மறுநாள் சேலம், ஆத்தூர், சின்ன சேலம் வழித்தடத்திற்கு பதிலாக சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, விருத்தாசலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்