பராமரிப்பு பணி: இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள்

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள்

Update: 2023-07-26 00:40 GMT


மதுரை மேற்கு கோட்டம் பசுமலை துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் அருள் நகர், சத்தியமூர்த்தி நகர், பைபாஸ் ரோடு, அரசு போக்குவரத்து கழகம், நேரு நகர், கலைமகள் தெரு, துரைச்சாமி நகர் தெரு, வான மாமலைநகர், வேல்முருகன் நகர், ராம்நகர், சந்திரகாந்தி நகர் மேற்கு பகுதி, கற்பக நகர், ஜெய்நகர் மெயின்ரோடு, ஜெய்நகர் 2-வது தெரு மற்றும் 3-வது தெரு, மீனாட்சி நகர், அஜீத் அபார்ட்மெண்ட், ஜீவனா பள்ளி பகுதி, ஆதவன் தெரு, திருவள்ளுவர் தெரு, ராகவேந்திரா நகர், தானத்தவம் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் இன்று(புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

இதேபோல் அரசரடி துணைமின் நிலையத்திலும் இன்று பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நடராஜ் நகர், காளவாசல், தேனி மெயின் ரோடு, வ.உ.சி. தெரு, திருமலை காலனி, பாரதியார் தெரு, பல்லவன் நகர், முடக்கு சாைல, கோச்சடை, சாந்திசதன், வைகை விலாஸ், அங்காள ஈஸ்வரி நகர், எஸ்.வி.கே. நகர், அன்னைபாரத், மேலக்கால் மெயின் ரோடு, மயில்வேல் முருகன் கோவில், ஓம் நமச்சிவாய நகர் போன்ற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை மதுரை அரசரடி மேற்கு பெருநகர் செயற்ெபாறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

மேலும் செக்கானூரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.

இதனால் கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூர், சாக்கிலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதி மாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி போன்ற பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என செக்கானூரணி மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமலிங்கம் தெரிவிததுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்