புதர்மண்டி இருக்கும் ஜெயலலிதா சிலையை பராமரியுங்கள் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

புதர்மண்டி இருக்கும் ஜெயலலிதா சிலையை பராமரியுங்கள் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

Update: 2022-09-08 23:06 GMT

சென்னை,

முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநில சுயாட்சிக்கு தொடர்ந்து குரல் கொடுத்தது, 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு அளித்தது, கட்டணமில்லாக் கல்வி உட்பட அனைத்தையும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கிய ஜெயலலிதாவை கவரவிக்கும் வகையில் சென்னை, காமராஜர் சாலை, மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது.

அங்கு பராமரிப்புப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை. சிலையை சுற்றி புற்கள் மண்டிப்போய் கேட்பாரற்ற நிலையில் இருப்பதோடு, அங்கு பொருத்தப்பட்டிருந்த ஒளி விளக்குகள் எரியாமல் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏற்கெனவே அரசுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தமிழ்ச் சமுதாயத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவுச் சின்னங்களையும் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்