வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண் கைது

வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண் கைது

Update: 2022-06-17 14:06 GMT

கோவை, 

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது43).கடந்த மாதம் 31-ந் தேதி கார்த்திகேயன் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான கரூருக்கு சென்று விட்டார். வீட்டை வேலைக்கார பெண் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ஜெயந்தி (28) கவனித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கரூரில் இருந்து கடந்த 13-ந் தேதி கார்த்திகேயன் கோவை திரும்பினார். பின்னர் வீட்டுக்கு சென்றபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகையை காணவில்லை.

யாரோ திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், நகையை திருடியது ஜெயந்தி என்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து போலீசார் ஜெயந்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்