கியாஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சுரண்டையில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-03-10 18:45 GMT

சுரண்டை:

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சுரண்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி சேர்மக்கனி தலைமை தாங்கினார். சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன், மாவட்ட பொருளாளர் முரளிராஜா, சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், வேல்முருகன், ராஜ்குமார், பாலசுப்பிரமணியன், சாந்தி தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்