புதிய ஆணையராக மகேஸ்வரி நியமனம்

தஞ்சை மாநகராட்சி புதிய ஆணையராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-09-21 20:25 GMT

தஞ்சை, கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாநகராட்சிகளின் ஆணையர்கள் நிர்வாக காரணத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், கரூர் மாநகராட்சிக்கும், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், திண்டுக்கல் மாநகராட்சிக்கும், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தஞ்சை மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி நிர்வாக இயக்குனரக முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்