மகாவீர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் வாழும் ஜெயின் மக்கள் ஒன்று திரண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். அதன் ஒரு பகுதியாக நெல்லை டவுனில் உள்ள ஜெயின் கோவிலில் சார்பில் சிறப்பு வழிபாடும், மகாவீா் ரத ஊர்வலமும் நடைபெற்றது. நெல்லை டவுன் கீழ ரத வீதியில் அமைந்துள்ள ஜெயின் கோவில் முன்பிருந்து பேண்ட் வாத்திய இசையுடன் தொடங்கிய இந்த ரத ஊர்வலம் நெல்லை டவுன் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.