தஞ்சாவூர்:
மகாவீர் ஜெயந்தியையொட்டி தஞ்சை மனோஜியப்பா சந்திலுள் ஜைன கோவிலில் அவருடைய உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், அவரது உருவச்சிலை வீதியுலா நடைபெற்றது. வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மகாவீரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஜைன சங்கத்தினர் மகாவீர் ஜெயந்தி விழாவை கொண்டாடினர்.இதில் மகாவீர் பக்தர்கள் கலந்து கொண்டு மகாவீரரை வழிபட்டனர்