சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி விழா
திருப்பத்தூரில் உள்ள சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி விழாநடந்தது. இதில் கலெக்டர் சாமி தரிசனம் செய்தார்.;
திருப்பத்தூரில் உள்ள சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி விழா நடந்தது. இதில் கலெக்டர் சாமி தரிவசனம் செய்தார்.
திருப்பத்தூர மாவட்டத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் விடிய விடிய சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்த கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பத்தூரில் உள்ள பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத கோட்டை பிரம்மேஸ்வரர் கோவிலில் பிரம்மேஸ்வரருக்கு பால், இளநீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6 கால அபிஷேகம் நடைபெற்றது. கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் அறநிலை துறையினர் வரவேற்றனர்.
அதே போல் கொரட்டி ஈஸ்வரன் கோவில், மடவாளம் ஈஸ்வரன் கோவிலும் 6 கால பூஜைகள் விடிய விடிய நடந்து. இதையொட்டி அதிகாலை வரை மேற்கண்ட அனைத்து கோயில்களி லும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர் மகாசிவராத்திரியையொட்டி பரமேஸ்வரர் கோவிலில் நேற்று காலை காலை ருத்ரயாகம் நடந்தது. மாலை 4 மணிக்கு சனி மகாபிரதோஷத்தை ஓட்டி நந்தீஸ்வரருக்கு குடங்களில் பால் ஊற்றி பால் அபிஷேகம் நடைபெற்றது. கண்ணப்ப நாயனார் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது.