மூலநாதர் கோவிலில் மகாசக்தி பூஜை

மூலநாதர் கோவிலில் மகாசக்தி பூஜை

Update: 2023-07-22 18:45 GMT

குடவாசல்:

குடவாசல் அருகில் உள்ள மூலநாதர் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி மகாசக்தி பூஜை நடந்தது. முன்னதாக மூலநாதர், அபயாம்பிகை அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேக ஆராதனை நடந்தது. இதை ெதாடர்ந்து மகா சக்தி பூஜை மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வழிபட்டனர். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்