கனக சோளீஸ்வரர் கோவிலில் மகாருத்ரயாகம்

கனியாமூர் கனக சோளீஸ்வரர் கோவிலில் மகாருத்ரயாகம் நடந்தது.

Update: 2023-04-16 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கனக சோளீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும், உலக நன்மை வேண்டியும் மகாருத்ரயாகம் நடந்தது. இதில் யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்