மகாமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா

திருக்கடையூர் மகாமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2023-02-24 18:45 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூர் கீழத்தெருவில் மகாமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றம் தொடங்கியது. முன்னதாக விநாயகர், மகாமுத்து மாரியம்மன், வீரன், முருகன், பெரியாச்சி அம்மன் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது. முன்னதாக அமிர்தகடேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள முனீஸ்வரன் கோவிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக மகாமுத்து மாரியம்மனுக்கு வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்