மகாமாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக பூஜை தொடக்கம்
பூம்புகார் அருகே மகாமாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக பூஜை தொடக்கம்
திருவெண்காடு:
பூம்புகார் அருகே மகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நேற்று முன்தினம் நடந்தது. இதை அடுத்து கோவிலின் மண்டலாபிஷேக பூஜை நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி விநாயகர், மகாமாரியம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு நல்லெண்ணெய், பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.