தா.பேட்டை:
தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் தேவராயப்பட்டி கிராமத்தில் உள்ள மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புண்யாகவாசனம், அணுக்கை, வாஸ்துசாந்தி, யாகவேள்வி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதனைத்தொடர்ந்து மகாகணபதி, பகவதி அம்மன், கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.