திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது
திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே திருவக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் கோவிலின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன், செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் உமாமகேஸ்வரி, சிவாச்சாரியார் சேகர் குருக்கள், மேலாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.