கோவில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-12-06 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீபத்திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்படி கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவில், பழையபேட்டை ஈஸ்வரன் கோவில், கவீஸ்வரர் கோவில், காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் நேற்று மாலை சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மகா தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல வீடுகளில் பொதுமக்கள் தீபம் ஏற்றியும் கொழுக்கட்டை, பொறி உள்ளிட்டவற்றை படைத்தும் வழிபட்டனர்.

சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் உதவி கலெக்டர் சரண்யா, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகராஜ் மற்றும் மாநகர கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் ராமு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர். முன்னதாக நாதஸ்வர வாத்தியம் முழங்க, நெய்தீபத்துடன் ஊர்வலமாக சென்று மலைக்கோவிலின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் தீபத்தை தரிசித்து, அரோகாரா, அரோகரா சிவனே போற்றி போற்றி என்று பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை யொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை கோவில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மல்லிகார்ஜூன துர்க்கம் மலை மீதுள்ள சிவன் கோவில் மற்றும் கூச்சுவாடி முருகன் கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்