முருக்கம்பள்ளம் திரவுபதி அம்மன் கோவிலில்மகாபாரத திருவிழா

Update: 2023-05-27 18:45 GMT

கிருஷ்ணகிரியை அடுத்த முருக்கம்பள்ளம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடந்த இந்த விழாவில், தினமும் பாஞ்சாலி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பால்குடம், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து தீமிதி விழா நடந்தது. முன்னதாக திரவுபதி அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா நடைப்பெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மா விளக்கை கோவிலில் இருந்து ஊர்வலமாக கிராமத்திற்கு எடுத்து சென்று வழிபட்டனர். பின்னர் சாமி கரகத்துடன் மீண்டும் கோவிலுக்கு வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து முருக்கம்பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி, காத்தாடிகுப்பம், வெண்ணம்பள்ளி, ஜோடுகொத்தூர், மாதனகுப்பம், மேல்அக்ரஹாரம், மல்லிநாயனப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த தர்மகர்த்தாக்கள் முன்னிலையில், அர்சுணன் பட்டாபிஷேகம் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்