உலகளந்த பெருமாள் கோவிலில்மகா சாந்தி யாகம்

உலகளந்த பெருமாள் கோவிலில் மகா சாந்தி யாகம் நடைபெற்றது.;

Update: 2023-09-15 18:45 GMT


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலசாமி ஸ்ரீ ஜெயந்தி மகோற்சவம் கடந்த 6-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை இந்திர விமானத்திலும், இரவில் சந்திர பிரபை வாகனத்திலும் வேணுகோபால சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

அதை தொடர்ந்து நேற்று காலை மங்களகிரி, மதியம் மகாசாந்தியாகம், திருமஞ்சனம் நடந்தது. இதில் வேணுகோபால சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், இரவு புஷ்ப விமானத்தில் சாமி வீதி உலா காட்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் நிறைவு நாளான இன்று(சனிக்கிழமை) விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாவையொட்டி கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் கோவில் தேவஸ்தான ஏஜென்டு கோலாகலன் என்கிற கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர்களும், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்