கொட்டும் மழையில் மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கொட்டும் மழையில் மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-09-02 18:23 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த தேளூர் கிராமத்தில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் செல்வவிநாயகர், சுப்பிரமணியர், மகாசக்தி மாரியம்மன், காளியம்மன், கருப்பண்ணசுவாமி ஆகிய பரிவர தெய்வங்கள் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாக சாலை அமைக்கப்பட்டு வாஸ்த்துசாந்தி, கணபதி ஹோமம், கடஸ்தாபணம், புத்து மண் எடுத்தல் முதல் காலயாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு மேல் கோபூஜை, யாகசாலை பூஜை, நாடு சந்தானம், 2-ம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்து சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொட்டும் மழையில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்