திருச்சியில் மண்டை ஓடு மாலையுடன் அகோரிகள் மகா ருத்ர யாகம்
திருச்சியில் நவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவில் மண்டை ஓடு மாலையுடன் அகோரிகள் மகா ருத்ர யாகம் நடத்தினர்;
திருச்சி
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் நவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவில் மண்டை ஓடு மாலையுடன் அகோரிகள் மகா ருத்ர யாக பூஜை நடத்தினர்.
ஜெய் அகோர காளி, ஜெய் அஷ்டகாலபைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கு சிறப்புபூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடந்தது.
இந்த யாகபூஜையின் போது சக அகோரிகள் டம்ராமேளம் அடித்தும், மற்றும் சிவவாக்கியம் வாசித்தும், சங்குமுழங்கியும், மந்திரங்களை ஓதினர்.