மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி 28 அடி உயர தேரை பூக்களால் அலங்கரிக்கும் தலை அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் சாமியை தலையிலும், தோளிலும் சுமந்து வந்து தேரில் எழுந்தருள செய்தனர். இதைத்தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் கீழப்புலியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.