மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

Update: 2023-04-23 18:49 GMT

அரவக்குறிச்சியில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் இரவு கரகம்பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை திரளான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா இன்னும் 2 வாரங்கள் நடக்கிறது. இதையடுத்து தினமும் சுவாமிக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரவு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்களுக்கான தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை அரவக்குறிச்சி போலீசார் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்