மகா காளியம்மன் திரு நடன உற்சவ திருவிழா
குத்தாலம் மகா காளியம்மன் திரு நடன உற்சவ திருவிழா
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் திருத்துருத்தி என்னும் குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திரு நடன உற்சவ திருவிழா கடந்த 25-ந் தேதி சக்தி கரகம் எடுத்து இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று கோவிலிலிருந்து காளி புறப்பாடு தொடங்கி காளி வேடமணிந்த ஆண் பக்தர் ஒருவர் நடனமாடியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று நாயக்கர் தோட்டத்தில் உள்ள செல்வவிநாயகர் கோவிலுக்கு சென்றடைந்தது. முன்னதாக தங்கள் வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காளியம்மன் கோவில் தெருவாசிகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திரு நடன உற்சவ விழா எதிர்வரும் 14-ந் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.