ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்துக் கொண்ட மதுரை இளைஞர்...!

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த மதுரை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.;

Update: 2023-02-06 09:29 GMT

மதுரை,

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்தது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் குணசீலன்(26). இவர் கடந்த 6 மாதமாக ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடி வந்துள்ளார். முதலில் பணத்தை வென்றாலும், அடுத்தடுத்த மாதங்களில் பணத்தை இழந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான குணசீலன், லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு இளைஞர் குணசீலன் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்