நீட் தேர்வில் தமிழக அளவில் மதுரை மாணவர் முதல் இடம்

நீட் தேர்வில் தமிழக அளவில் முதல் இடத்தை மதுரையை சேர்ந்த மாணவர் பிடித்து சாதனை படைத்தார். அவர் 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்றார்.

Update: 2022-09-08 20:59 GMT

நீட் தேர்வில் தமிழக அளவில் முதல் இடத்தை மதுரையை சேர்ந்த மாணவர் பிடித்து சாதனை படைத்தார். அவர் 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்றார்.

நீட் தேர்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்பட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மதுரையைச் சேர்ந்த மாணவன் திரிதேவ் விநாயகா, அகில இந்திய தரவரிசையில் 30-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

கடின உழைப்பு

சாதனை குறித்து மாணவர் திரிதேவ் விநாயகா நிருபர்களிடம் கூறியதாவது:- நீட் தேர்வில் வெற்றி பெற 2 ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்தேன். கருத்துகளை புரிந்து கொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் கற்றல் அட்டவணையை கண்டிப்பாக பின்பற்றியதால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. ஆன்லைன் மூலமாகவும் பல்வேறு கேள்விகளை கூர்ந்து படித்தேன். தேர்வுக்கு தயாராகும் வகையில் நேர மேலாண்மை பயிற்சியும் பெற்றேன். இந்த தேர்வு பற்றிய பல கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டேன். கடின உழைப்பு மற்றும் பெற்றோர் ஊக்கம் காரணமாக இந்த சாதனையை அடைய முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்