பெண்கள் பளுதூக்கும் போட்டியில் மதுரை மாணவி சாதனை

பெண்கள் பளுதூக்கும் போட்டியில் மதுரை மாணவி சாதனை படைத்தார்

Update: 2022-10-31 19:42 GMT


டெல்லியில் உலக சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டிகள் நடந்தது. இதில், ஜூனியர் பிரிவில் மதுரையைச் சேர்ந்த கேஷினி ராஜேஷ் என்ற கல்லூரி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்தநிலையில் மதுரை வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் இப்படி ஒரு போட்டி இருப்பது எனக்கு தெரிய வந்தது. அதனால் சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் ஹரிஹரனிடம் பயிற்சி பெற்றேன். நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக பளுதூக்கும் போட்டியில் கெட்டில்பெல் பிரிவில் ஜூனியரில் இந்திய அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்றேன். இந்த போட்டி இரு கைகளிலும் சம அளவு 16 கிலோ எடையை பத்து நிமிடம் சைக்கிளிங் வகையில் செய்து காட்ட வேண்டும். அதை செய்து இந்தியாவிலேயே ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறேன். இந்த போட்டி பற்றி அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்