மதுரை-நத்தம் சாலை பறக்கும் மேம்பாலத்தில் படம் எடுத்தமருத்துவ மாணவரை தாக்கி போன் பறிப்பு
மதுரை-நத்தம் சாலை பறக்கும் மேம்பாலத்தில் படம் எடுத்த மருத்துவ மாணவரை தாக்கி மர்ம நபர்கள்செல்போனை பறித்து சென்றனர்.
மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி முதல் தெருவை சேர்ந்தவர் கவின்வில்சன்(வயது 19). இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட நத்தம் மேம்பாலத்தை காண அங்கு ெசன்றார். அங்கு பாலத்தின் நடுவே நின்று அதன் அழகை ரசித்து செல்போனில் படம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் 3 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று மாணவரை தாக்கி செல்போனை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து அவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் தேடி வருகிறார்கள்.