மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தரச்சான்று வழங்கியது இந்திய உணவு பாதுகாப்புத்துறை
அன்னதான உணவுகள் சுகாதாரமாகவும், தரத்துடன் வழங்கப்பட்டு வருவதால் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.;
மதுரை,
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் மட்டுமின்றி கோயிலின் கலை அழகைக் காண்பதற்காக வெளிமாநிலம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் தினமும் நூற்றுக்கணக்கில் வந்துசெல்கின்றனர். அவர்களுக்கான உணவு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்கனவே செய்து தந்துள்ளது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அன்னதான உணவுகள் சுகாதாரமாகவும், தரத்துடன் வழங்கப்பட்டு வருவதாக இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று வழங்கியுள்ளது.
கோவிலில் வழங்கப்படும் அன்னதான உணவுகள் சுகாதாரமாகவும், தரத்துடன் வழங்கப்பட்டு வருகிறதா என்று அதிகாரிகளால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுகாதாரமான உணவுகள் தான் வழங்கப்படுகிறது என்று உறுதிசெய்த பிறகே இந்திய உணவு பாதுகாப்புத் துறை இந்த தரச்சான்று வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 26 கோவில்களுக்கு இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.