எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வி உதவித் தொகை - அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வித் தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-12-23 07:52 GMT

மதுரை,

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வித் தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் எஸ்டி எஸ்டி மாணவர்களுக்கு, கல்வியாண்டின் தொடக்கத்திலேயே உதவித் தொகை வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனு, நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தகுதியான எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வித் தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நீதிபதிகள், சமூக நீதித்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்