மதுரை கோர்ட்டு ஊழியர் மயங்கி விழுந்து சாவு
மதுரை கோர்ட்டு ஊழியர் மயங்கி விழுந்து இறந்துபோனார்
மதுரை மேலபொன்னகரம் 4-வது தெரு மாநகராட்சி காலனியைச் சேர்ந்தவர் சங்கரன் (வயது 57). இவர் மதுரை கோர்ட்டில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் அழகரை தரிசிக்க சென்று விட்டு நத்தம் ரோட்டில் உள்ள ஆயுதப்படை வளாகத்திற்குள் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் சங்கரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.