மதுரை சித்திரை திருவிழா - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குமிடத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5-ந்தேதி நடைபெற உள்ளது.;

Update: 2023-04-25 17:25 GMT

மதுரை,

மதுரை சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குமிடத்தில் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் வரும் மே 5-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Full View


 

Tags:    

மேலும் செய்திகள்