மாதனூர் ஒன்றியக்குழு கூட்டம்

மாதனூர் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-11-03 18:12 GMT

ஆம்பூர்

மாதனூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ப.ச.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சாந்தி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஒன்றிய பொதுநிதி செலவினங்கள், நிர்வாக மேம்பாடு குறித்த தீர்மானம் மற்றும் செலவினங்கள் குறித்த தீர்மானங்களுக்கு அங்கீகாரம் கோரப்பட்டது.

மேலும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறினார்கள்.

அதற்கு ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதில் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீல், சந்திரன், அதிகாரிகள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்