மெகா எந்திரங்கள் வர்த்தக கண்காட்சி
இலஞ்சியில் மெகா எந்திரங்கள் வர்த்தக கண்காட்சி நடந்தது.
தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் சார்பில் இலஞ்சியில் மெகா எந்திரங்கள் மற்றும் வர்த்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பழனி நாடார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சங்க தலைவர் அன்பழகன் வரவேற்றார். சோகோ தகவல் தொழில்நுட்ப நிறுவன தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார்.
கண்காட்சியில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் எந்திரங்கள் பல்வேறு அரங்குகளில் அமைக்கப்பட்டு இருந்தன. நிகழ்ச்சியில் இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவி சின்னத்தாய், தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், அ.தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.