போலி நகைகளை அடகு வைத்து சொகுசு பங்களாவில் உல்லாச வாழ்க்கை

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய தம்பதியினர் போலி நகைகளை அடகு வைத்து சொகுசு பங்களாவில் உல்லாச வாழ்க்கை நடத்தியது தெரிய வந்துள்ளது.

Update: 2022-06-17 17:30 GMT

தக்கலை:

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய தம்பதியினர் போலி நகைகளை அடகு வைத்து சொகுசு பங்களாவில் உல்லாச வாழ்க்கை நடத்தியது தெரிய வந்துள்ளது.

நகை அடகு வைத்து மோசடி

குமாரபுரம் அருகே உள்ள சித்திரங்கோட்டில் சுரேஷ் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிதி நிறுவனத்தில் சம்பவத்தன்று ஒரு பெண் நகையை அடகு வைத்து பணம் பெற்று சென்றார்.

இந்தநிலையில் ஒரு தம்பதியினர் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்று செல்வதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதை பார்த்த சுரேஷ், சந்தேகத்தின் பேரில் அந்த பெண் அடகு வைத்த நகையை சோதனை செய்தார். அப்போது அது போலி நகை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சுரேஷ் கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும், நிதிநிறுவனத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

தம்பதி கைவரிசை

விசாரணையில் நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியை ேசர்ந்த ஜேசுராஜா (வயது48) தனது 2-வது மனைவி அனு என்ற அனுஷாவோடு சேர்ந்து போலி நகைகளை குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடகு வைத்து மோசடி செய்தது தெரிய வந்தது. இவர்கள் மீது கருங்கல், புதுக்கடை போன்ற போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதையடுத்து நேற்று முன்தினம் ஜேசுராஜா வேர்க்கிளம்பி பகுதியில் காரில் ெசன்று கொண்டிருந்த போது போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மோசடி கும்பலுடன் தொடர்பு

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நானும் எனது மனைவி அனுஷாவும் போலி நகைகளை ஏஜெண்டு மூலம் பெற்று பல்ேவறு நிதி நிறுவனங்களில் அடகு வைத்து வந்தோம். இவ்வாறு கிடைக்கும் பணத்தில் 3-ல் ஒரு பங்கு பணத்தை நாங்கள் எடுத்துக்கொள்வோம். மீதி பணத்தை ஏஜெண்டிடம் கொடுத்துவிடுவோம். அந்த ஏஜெண்டு யார்? என்பது எனக்கு தெரியாது. எனது மனைவி அனுஷாவுக்குதான் எல்லாம் தெரியும்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

சொகுசு பங்களா

போலி நகை அடகு வைத்து கிடைத்த பணத்தில் இவர்கள் நாகர்கோவில் ெசட்டிக்குளத்தில் உள்ள சொகுசு பங்களாவில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இதுபோல் ஆசாரிபள்ளத்திலும் இவர்களுக்கு சொந்தமாக வீடு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் செட்டிக்குளத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்து ஏராளமான போலி தங்க காப்பு, அடகு வைத்த ரசீதுகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இதற்கிடைேய அனுஷா தலைமறைவானார். அவரை பிடித்தால் தான் இதன் முழு உண்மையும் தெரியவரும் என்பதால் அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகிறார்கள்.

கணவர் பிடிபட்ட தகவல் அறிந்ததும் அனுஷா போலி நகைகளை கொடுத்த கும்பலிடம் அடைக்கலம் தேடி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்