கீழக்கடையம் உடையார் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா

கீழக்கடையம் உடையார் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2022-06-19 17:22 GMT

கடையம்:

கீழக்கடையம் உடையார் பிள்ளையார் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், துர்க்கா ஹோமம், பிரம்மசாரி பூஜை, கோ பூஜை, கஜபூஜை, பாபநாசத்தில் இருந்து 108 தீர்த்தகுடம் எடுத்து வருதல், கும்ப அலங்காரம், முதல்கால யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.

நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருமுறை பாராயணம், 2-ம் கால யாகசாலை பூஜை, யாத்ராதானம், கடம்புறப்பாட்டை தொடர்ந்து கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உடையார் பிள்ளையார் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் மகேஸ்வரபூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக நவக்கிரகம் வடக்கத்தி அம்மன் பிரதிஷ்டை நடந்தது. விழாவில் புளிகணேசன், ராமசாமி, அற்புதராஜ், டவர் முருகன், சாஸ்தா, யு.சி.சி. நிர்வாகிகள் வேல்முருகன், சேர்மசெல்வன், கணேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை யு.சி.சி. நண்பர்கள் மற்றும் கீழக்கடையம் ஊர் பொதுமக்கள், பதினெட்டுபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்