தேசிய கொடியை உரிய மரியாதையுடன் இறக்கி பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்
வீடுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை உரிய மரியாதையுடன் இறக்கி பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினாா்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடியதை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி என்ற திட்டத்தின் கீழ் கடந்த 13-ந் தேதி முதல் 15-ந் தேதி (அதாவது நேற்று முன்தினம்) வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடி உள்ளனர். இத்திட்டம் 15-ந் தேதியுடன் முடிவடைந்ததால் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை பொதுமக்கள் உரிய மரியாதையுடன் இறக்கி, தங்கள் வீடுகளில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.