காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது - வானிலை ஆய்வு மையம்
சென்னைக்கு தென்கிழக்கே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னையில் இருந்து தென்கிழக்கே 510 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் வரும் 4ம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5ம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.