லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைவு

லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது

Update: 2022-10-10 16:13 GMT

கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒருஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும். கடந்த சில வாரங்களாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1,866 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதனால் 4 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு குறைந்து வருகிறது. இதன் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1200 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று காலை முதல் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டரில் மட்டும் 108 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையின் இன்றைய நீர்மட்டம் 127.30 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 239 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்