ஜப்பானில் மலர்ந்த காதல்.. தமிழ்நாட்டு இளைஞரை கரம்பிடித்த வியட்நாம் பெண்
நெல்லையைச் சேர்ந்த இளைஞருக்கும், வியட்நாம் நாட்டு பெண்ணிற்கும் கூடங்குளத்தில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்தவர் தாமஸ் பிரபு. மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் பட்டதாரியான இவர் ஜப்பான் நாட்டில் உயர்கல்வி படித்து வருகிறார். அங்கு தாமஸ் பிரபுவுக்கும், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வான் என்ற பெண்ணுக்கு காதல் மலர்ந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதமும் வாங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து கூடங்குளத்தில் கிறிஸ்தவ முறைப்படி தாமஸ் பிரபு-வான் தம்பதிக்கு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு வியட்நாமில் இருந்து மணப்பெண்ணின் உறவினர்கள் பலர் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.