காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குடியாத்தம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-05-08 17:31 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ெரயில் நிலையம் அருகே உள்ள பரசுராமன்பட்டி வைஷ்ணவி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், மருத்துவ பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி இளவரசி (வயது 24). இருவரும் காதலித்து கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டில் இளவரசி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இளவரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட இளவரசிக்கு திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்