காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சமடைந்தனர்.;

Update:2022-07-16 01:59 IST

முசிறி:

தொட்டியம் அருகே உள்ள அய்னாபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜின் மகன் விஷ்வா(வயது 22). இவர் கேட்டரிங் படித்துவிட்டு ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதேபோல் முசிறி அருகே உள்ள தொப்பலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரின் மகள் ஜெயா(20). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் டி.பார்ம் படித்து வருகிறார். இவர்கள் பஸ்சில் சென்று வந்தபோது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி கருப்பத்தூர் சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் பாதுகாப்பு கேட்டு முசிறி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களின் பெற்றோர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஜெயாவின் பெற்றோர் திருமணத்தை ஏற்க மறுத்து சென்றனர். இதையடுத்து விஷ்வாவின் பெற்றோர், அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்