வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்
வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.
கரூர் மாவட்டம் கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கௌதம் (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் டயர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ராயனூர் பகுதியை சேர்ந்தவர் சந்தியா (23). இவர்கள் இருவரும் பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கரூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
இதேபோல் சாணார்பட்டி அருகே உள்ள மருனூத்தை சேர்ந்தவர் யாஸ்மின் மதினா (28). திண்டுக்கல் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பராஜ் (28). இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரண்டு ஜோடிகளின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மணமக்கள் அனைவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
----
Reporter : V.Smith Yesu Raja Location : Dindigul - Vadamadurai