கெங்கவல்லி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்...!

கெங்கவல்லி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

Update: 2022-06-11 16:00 GMT

சேலம்:

 

சேலம் மாவட்டம் கடம்பூர் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் விஜய்(வயது23). இவர் நெல் அறுவடை எந்திரத்தில் டிரைவராக இருந்து வருகிறார்.

இதேபோன்று பைத்தூர் வள்ளி நகர் பகுதியை சேர்ந்த சாமி மகள் பிரியா(20). இவர் தனியார் கல்லூரில் 3 ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய்-பிரியா இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி ஆத்தூர் வட சென்னிமலை முருகன் கோவிலில் இன்று காலை 7 மணிக்கு திருமணம் செய்து கொண்டு கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்