காதல் ஜோடி தஞ்சம்
சேலம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவருடைய மகன் சஞ்சய் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (21). இருவரும் பட்டதாரிகள். இவர்கள் இருவரும் நேற்று காலை பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
இது குறித்து ஆர்த்தி கூறும் போது, வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்திற்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் வேறு ஒருவர் எங்களை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுக்கின்றார். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்து உள்ளோம் என்று கூறினார்.