அரசு பள்ளிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் விழா

கோவில்பட்டி அரசு பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2022-08-24 15:30 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு கம்மவார் டிரஸ்ட் அறக்கட்டளை சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் விழா நேற்று

நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி சின்னராசு தலைமை வகித்தார். ஆசிரியர் கெங்கம்மாள்

வரவேற்று பேசினார். கம்மவார் டிரஸ்ட் அறக்கட்டளை தலைவர் வி.பி.எஸ். சுப்பையா, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதாவிடம் ஒலி பெருக்கி சாதனங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள் பி.ஆர்.எஸ். சீனிவாசன், விநாயகா ரமேஷ், வரதராஜன், ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

உதவி தலைமை ஆசிரியர் ரூத் ரத்னகுமாரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்