லாட்டரி சீட்டு, புகையிலை பொருட்கள், மது விற்ற 15 பேர் கைது

தஞ்சை மாவட்டத்தில் லாட்டரி சீட்டு, புகையிலை பொருட்கள், மது விற்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-04 21:32 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் லாட்டரி சீட்டு, புகையிலை பொருட்கள், மது விற்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் அதிரடி சோதனை

தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் லாட்டரி சீட்டு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையின் போது பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திருவிடைமருதூர் பகுதியில் தமிழரசி, தனபால், புகழேந்தி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பந்தநல்லூர் பகுதியில் பயாஸ், கும்பகோணம் கிழக்கு பகுதியில் ஞானமணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் ஜாகிர்உசேன், பக்கீர் மொகிதீன், திருச்சிற்றம்பலம் பகுதியில் சரவணன், சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மது விற்றவர்கள் கைது

தஞ்சை பகுதியில் மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் டாஸ்மாக் கடை மதுவை வாங்கி வெளிச்சந்தையில் விற்பனை செய்த முத்துக்குமார், லதா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 குவாட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கும்பகோணம் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் ராஜகிரியை சேர்ந்த கதிரவனும், பட்டுக்கோட்டை மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் வான்மதி, நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 17 மது பட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

15 பேர் கைது

இதே போல் தஞ்சை நகர கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் ஏ.ஓய்.ஏ. நாடார் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த தியாகராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் லாட்டரி சீட்டு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் டாஸ்மாக் மது விற்பனை செய்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்